இரவில் கேம் விளையாட தடை.! China government to ban kids from playing video games at night | Tech News in Tamil

இரவில் கேம் விளையாட தடை.!  China government to ban kids from playing video games at night | Tech News in Tamil


சமீபகாலமாக வீடியோ கேம் விளையாடும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த வீடியோ கேமுக்கு அடிமையாகி வருகிறார்கள்.இதையொட்டி சீனாவில் கேம் விளையாடுவதற்கு சில கட்டுப்பாடுகளை அந்த நாட்டு அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி 18 வயதிற்கும் கீழ் உள்ளவர்கள் வாரநாட்களில் அதிகபட்சம் 90 நிமிடங்கள் மட்டுமே கேம் விளையாட முடியும், வார இறுதிநாட்களில் மூன்று மணி நேரம் விளையாடலாம் 


அதுமட்டுமின்றி 18 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள் இரவு 10 மணி முதல் காலை 8 மணி வரைக்கும் கேம் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த கேம்களை உருவாக்கும் நிறுவனங்களுக்கும் பல கட்டுப்பாடுகளை சீன அரசு விதித்துள்ளது .