இனி பழைய SBI ATM கார்டுகளை பயன்படுத்த முடியாது ! SBI to block old ATM debit cards by December 31
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா டிசம்பர் 31 ஆம் தேதி வரைக்கும்தான் பழைய மேக்னடிக் ஸ்ட்ரிப் கொண்ட ஏடிஎம் கார்டுகள் வேலை செய்யும் என அறிவித்துள்ளது.
ஜனவரி ஒன்றாம் தேதி முதல் சிப் பொருத்தப்பட்ட ஏடிஎம் கார்டுகள் தான் வேலை செய்யும் என கூறியுள்ளார்கள்.
என்ன காரணம்?
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் பழைய மேக்னடிக் ஸ்ட்ரிப் கொண்ட ஏடிஎம் கார்டுகள் எளிதாக ஹேக் செய்துவிடலாம் அதன் காரணமாக தான் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா புதிய சிப் வைத்த ஏடிஎம் கார்டுகளை அறிமுகம் செய்துள்ளார்கள்.
புதிய சிப் பொருத்தப்பட்ட ஏடிஎம் கார்டுகளை எப்படிப் பெறுவது?
புதிய சிப் பொருத்தப்பட்ட ஏடிஎம் கார்டுகளை பெற நேரடியாக வங்கிக்கு சென்று விண்ணப்பித்து இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.அல்லது எஸ்பிஐ யோனோ ஆப், ஆன்லைன் பேங்கிங் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் போது உங்களுடைய முகவரி சரியாக இருக்கின்றனவா என சரி பார்த்து விண்ணப்பிக்கவும்.