ஆப்பு வைத்த ஜியோ ! இனி Jio- வில் இல்லை இலவசம் | No more free Jio phone calls to other networks | Tamil Tech News

ஆப்பு வைத்த ஜியோ ! இனி Jio- வில் இல்லை இலவசம் | No more free Jio phone calls to other networks | Tamil Tech News


இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ஜியோ நெட்வொர்க் பயன்படுத்துகின்றார்கள்.  ஜியோ ஆரம்பத்தில் பல சேவைகளை இலவசமாகக் கொடுத்தது.


ஜியோ வருகைக்கு முன்பாக 1GB DATA 200 ரூபாய்க்கும் அதிகமாக மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மக்களுக்கு கொடுத்து வந்தார்கள்.  ஆனால் ஜியோ வருகைக்குப் பின்னால் நிறைய வாடிக்கையாளர்கள் ஜியோ பக்கம் சென்றார்கள்.


அதன் காரணமாக பல தனியார் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை கொடுக்க ஆரம்பித்தார்கள். பல நிறுவனங்கள் நஷ்டம் காரணமாக வியாபாரத்தை கைவிட்டார்கள்.


தற்போது ஜியோ நிறுவனம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதில் ஜியோ நெட்வொர்க்கிலிருந்து பிற நெட்வொர்க்கு  பேசும்போது நிமிடத்திற்கு 0.6 பைசா வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.


நீங்கள் அனைத்து கால்களும் இலவசமாக பேச வேண்டும் என்றால் உங்களுடைய நண்பர்களை ஜியோ குடும்பத்தில் இணைய சொல்லுங்கள் என ஜியோ அறிவித்துள்ளது.  இந்த அறிவிப்பு ஜியோ வாடிக்கையாளர் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.