ஆன்லைன் கேஸ் புக்கிங் – How To Book Gas Cylinder in Whatsapp in Tamil Nadu | வாட்ஸ் அப்பில் சமையல் கேஸ் புக்கிங் செய்வது எப்படி ?
LPG வாடிக்கையாளர்கள் மிக எளிதில் வாட்ஸ்அப் மூலமாக சமையல் கேஸ் புக்கிங் செய்யலாம். ஏற்கனவே இந்த சேவை தமிழ்நாட்டில் இருக்கின்றது ஆனால் பலருக்கும் இந்த சேவை பற்றி தெரியவில்லை.
ஒரே ஒரு மெசேஜ் செய்வதன் மூலம் உங்களுடைய கேஸ் புக்கிங் செய்து விடலாம். வாட்ஸ்அப் மூலம் எப்படி கேஸ் சிலிண்டர் புக் செய்வது வாருங்கள் பார்க்கலாம்.
முதலில் உங்களுடைய மொபைல் போனில் 7588888824 என்ற நம்பரை பதிவு செய்து கொள்ள வேண்டும் இது Indian Oil Corporation நம்பர் ஆகும்.
உங்களுடைய மொபைல் நம்பர் கேஸ் சிலிண்டர் புக் செய்வதற்கு ரெஜிஸ்டர் செய்திருந்தால் REFILL என்று டைப் செய்தால் போதும் உங்கள் கேஸ் சிலிண்டர் புக் செய்யப்பட்டு உங்களுக்கு புக்கிங்காண மெசேஜ் வந்துவிடும்.
உங்களுடைய மொபைல் நம்பர் Indian Oil Corporation அதாவது கேஷ் சிலிண்டர் உடன் ரெஜிஸ்டர் செய்யப்படவில்லை என்றால் REFILL # உங்களின் 17 இலக்கு LPG ID டைப் செய்து அனுப்ப வேண்டும்
உதாரமனாக REFILL #751234567891134567 என்று டைப் செய்ய வேண்டும்.
உங்களின் கேஸ் சிலிண்டர் புக்கிங் STATUS புக்கிங் நீங்கள் ட்ராக் செய்து பார்த்து கொள்ள முஐடியும்.STATUS செக் செய்வதற்க்கு STATUS # உங்களின் 17 இலக்கு LPG ID டைப் செய்து அனுப்ப வேண்டும் அப்பொழுது கேஸ் சிலிண்டர் டெலிவரி தகவலை பற்றி தெரிந்து கொள்ள முடியும்.