அனைத்து கிராமங்களுக்கும் Bharath Net இலவச wifi வசதி : Free WiFi to all villages connected via Bharat Net till March 2020
மத்திய அரசு Bharat Net திட்டத்தின் மூலமாக இந்தியாவில் உள்ள கிராமப்புறங்கள் அனைத்துக்கும் இணையத்தளம் கிடைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
இந்த திட்டத்தில் ஏற்கனவே 48,000 கிராமங்களுக்கு இலவச WiFi சேவை வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறுகையில். வரும் 2020 மார்ச் மாதத்துக்குள் இந்தியாவில் இருக்கும் அனைத்து கிராமத்திற்கும் இந்த திட்டம் கொண்டு செல்லப்படும் என கூறியுள்ளார்.
இதன் மூலமாக கிராமப்புற மக்களுக்கு கல்வி, சுகாதாரம் மற்றும் அரசின் திட்டங்கள் எளிதில் கொண்டு செல்ல இது உதவும் .