சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி F41 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்கள், விலை மற்றும் எப்பொழுது விற்பனைக்கு வருகின்றது என்பதை பற்றி பார்க்கலாம்.
சாம்சங் நிறுவனம் தன்னுடைய F சீரிஸில் முதல் ஸ்மார்ட்போனாக சாம்சங் கேலக்ஸி F41 என்கின்ற மொபைலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளார்கள்.இந்த F41ஸ்மார்ட்போன் ஃப்யூஷன் கிரீன், ஃப்யூஷன் பிளாக் மற்றும் ஃப்யூஷன் ப்ளூ கலர் விருப்பங்களில் வருகிறது.
இந்த ஸ்மார்ட்போனில் சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளே, 6000 எம்ஏஎச் பேட்டரி, எக்ஸினோஸ் 9611 SoC மற்றும் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு போன்ற பல்வேறு மிரட்டலான சிறப்பு அம்சங்கள் இந்த மொபைலில் உள்ளது.
புகைப்படம் எடுப்பதற்காக பின்புறத்தில் 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்பி டெப்த் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது மேலும் 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி F41 இந்திய விலை :
சாம்சங் கேலக்ஸி F41 மொபைல் 4 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.16,999 க்கும், இதன் 4 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.17,999 க்கும் அறிமுகமாகி உள்ளது.
*அறிமுக சலுகையாக அக்டோபர் 16ஆம் தேதி பிளிப்கார்ட் நடக்கும் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் ரூ .15,499 என்ற சலுகை விலையில் சாம்சங் கேலக்ஸி F41 கிடைக்கிறது.
Samsung Galaxy F41 – Full Specifications
Launch Date | 2020, October 08 |
Display | 6.4 inch 19.5:9 ratio Full HD+ sAMOLED Display |
Build | Glass front, plastic back, plastic frame |
Weight | 191 g |
Colors | Fusion Black, Fusion Blue, Fusion Green |
SIM | Dual SIM (Nano-SIM, dual stand-by) |
Expandable Memory | Dedicated Slot (Expandable Upto 512 GB) |
Rear camera | 64MP (Main) + 5MP (Depth) + 8MP (Ultra Wide) |
Video(Rear) | 1080p@30fps |
Front camera | 32MP Front Camera |
Video (Front) | 1080p@30fps |
Fingerprint sensor | Rear-mounted |
Chipset | Exynos 9611 |
GPU | Mali G72 MP3 |
OS | Android 10 |
UI | One UI Core 2.1 |
BATTERY | 6000 mAh Lithium-ion Battery |
Charging | 15W Fast Charging |