பட்ஜெட் விலையில் Realme 7i இந்தியாவில் அறிமுகம் !

ரியல்மி நிறுவனம் புதிய ரியல்மி 7i  மொபைலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளார்கள். இந்த ஸ்மார்ட்போனின் விலை சிறப்பு அம்சங்கள் மற்றும் எப்பொழுது விற்பனைக்கு வருகின்றது என்பதை பற்றி பார்க்கலாம்.

ரியல்மி நிறுவனம் சமீபத்தில்தான் ரியல்மி 7 மற்றும் ரியல்மி 7ப்ரோ என்கின்ற மொபைலை அறிமுகம் செய்திருந்தார்கள். தற்போது ரியல்மி 7 தொடரின் கீழ் புதிய மாடலாக ரியல்மி 7ஐ ஸ்மார்ட் போனை ரியல்மி அறிமுகம் செய்துள்ளது.  இந்த மொபைலை கடந்த செப்டம்பர் மாதம் ரியல்மி நிறுவனம் இந்தோனேசியாவில் அறிமுகம் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் 90 ஹெர்ட்ஸ் எல்சிடி டிஸ்ப்ளே, குவாட் ரியர் கேமரா அமைப்பு, 5000 எம்ஏஹெச் பேட்டரி, பின்புறம் கைரேகை சென்சார் போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த மொபைலில் உள்ளது.

புகைப்படம் எடுப்பதற்காக 4 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

ரியல்மி 7i  இந்திய விலை :

ரியல்மி 7i  மொபைல் 4 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.11,999 க்கும், இதன் 4 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.12,999 க்கும் அறிமுகமாகி உள்ளது.

RamInternal StoragePriceBuy
4 GB64 GBRs. 11,999Flipkart
4 GB128 GBRs. 12,999Flipkart

 ரியல்மி 7i  எப்பொழுது விற்பனைக்கு வருகின்றது ?

ரியல்மி 7i மொபைல் வருகிற அக்டோபர் 16ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு  பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி வலைத்தளம் மூலமாக விற்பனைக்கு வருகிறது.

Realme 7i – Full phone specifications

Launch Date2020, October 07
Display6.5 inches 20:9 ratio IPS LCD HD+
BuildGlass front(Corning Gorilla Glass), plastic back, plastic frame
Weight188 g 
ColorsFusion Blue, Fusion Green
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
Expandable MemoryDedicated Slot (Expandable Upto 512 GB)
Rear camera64MP primary camera
8MP ultra wide-angle lens ,
2 MP Macro lens
2 MP B&W lens
Video(Rear)Cinema Mode
Support UIS Video Stabilization
Support UIS Max Video Stabilization
Support 1080P/30fps video recording
Support 720P/60fps video recording
Support 720P/30fps video recording
Support 720p/120fps slow motion
Front camera16 MP In-display Selfie
Sony IMX471 Sensor
Video (Front)Support UIS Video Stabilization
Support 1080P/30fps video recording
Support 720P/30fps video recording
Fingerprint sensorRear-mounted
ChipsetSnapdragon 662
GPUAdreno 610
OSAndroid 10
UIRealme UI
BATTERY5000 mAh
Charging18W Fast charging