Vodafone is offering 2GB of data every day for a week to select users
சமீபத்தில்தான் ஜியோ நிறுவனம் சில தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இலவச டேட்டா சலுகையை அறிவித்தார்கள். அந்த வரிசையில் தற்போது வோடாபோன் ஐடியா நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா மற்றும் இலவச அழைப்புகளை வழங்குகின்றது இந்த சலுகை ஏழு நாட்கள் செல்லுபடியாகும்.
யார் யாருக்கு இந்த சலுகை கிடைக்கும் என்று இதுவரைக்கும் எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. சில பயனாளர்கள் தங்களுக்கு கிடைத்த இலவச டேட்டா மற்றும் குரல் அழைப்பு பற்றிய தகவல்களை தங்களுடைய சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ளார்கள்.
ஜியோ நிறுவனத்துக்குப் போட்டியாக வோடபோன் தற்போது இந்த சலுகையை வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு இந்த சலுகை இருக்கின்றதா என்பதை 121363 ஐ டயல் செய்து தெரிந்து கொள்ளவும்.