Uber Eats நிறுவனத்தை ஜொமாட்டோ நிறுவனம் வாங்கியது : uber eats ends in india | Zomato buys Uber Eats

Uber Eats நிறுவனத்தை ஜொமாட்டோ நிறுவனம் வாங்கியது : uber eats ends in india | Zomato buys Uber Eats


பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனம் Uber Eats சமீபகாலமாக கடும் நஷ்டத்தை சந்தித்தது. இந்நிலையில் இந்த நிறுவனத்தை விற்பனை செய்யப் போவதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்தது.


இந்த நிறுவனத்தை வாங்க இந்தியாவில் இருக்கும் சக போட்டியாளராக ஸ்விகி மற்றும் ஜொமாட்டோ நிறுவனங்களுக்கு மத்தியில் போட்டா போட்டி நிலவியது. 

இந்நிலையில் Uber Eats நிறுவனத்தை ஜொமாட்டோ நிறுவனம் தற்போது வாங்கியுள்ளது. இதைப் பற்றிய தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு Uber Eats மின்னஞ்சல் அனுப்பி உள்ளது.

அதில் Uber Eats  நிறுவனத்தை  ஜொமாட்டோ  வாங்கி உள்ளதாகவும். இனி தங்கள் வாடிக்கையாளர்கள் ஜொமாட்டோவில் உணவுகளை ஆர்டர் செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. 

இந்தியாவில் மட்டும்தான் Uber Eats நிறுத்தப்படுகிறது மற்ற நாடுகளில் Uber Eats சேவைகள் தொடரும் என கூறப்பட்டுள்ளது.