Cable Tv Price Decrese In Tamil Nadu – தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கட்டணம் அதிரடி குறைப்பு

Tamil Nadu Arasu Cable TV tariff slashed – தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கட்டணம் அதிரடி குறைப்பு

இந்நிலையில் மத்திய அரசு மற்றும்  ட்ராய் கொண்டுவந்த புதிய விதிமுறையின்படி மக்களுக்கு விருப்பமான சேனல்களை அவர்களாகவே தேர்ந்தெடுத்து அதற்கு மட்டும் பணம் கொடுத்தால் போதும் என்ற திட்டம் அமலுக்கு வந்தது. அது மட்டுமல்ல இலவச சேனல்களுக்கும் மாதம் 130 ரூபாய் பிளஸ் ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என்று கொண்டு வந்தார்கள் இதையடுத்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கட்டணம் அதிரடியாக உயர்ந்தது

 தமிழ்நாடு மக்கள் அரசு கேபிள் டிவி கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர் ஜனவரி 26 ஆம் தேதி அமைச்சர் உடுமலை k ராதாகிருஷ்ணன் தமிழ் நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தலைவராக பொறுப்பேற்றார் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது தமிழகத்தில் கேபிள் டிவி ஒளிபரப்பில் கடுமையான போட்டி இருப்பதாகவும். இந்த போட்டியை சமாளிக்கும் விதமாக மிகவிரைவாக கேபிள் டிவி கட்டணம் குறைக்கப்படும் என்று கூறியிருந்தார்

இந்நிலையில் மக்களின் கோரிக்கையை ஏற்று பத்தாம் தேதி முதல் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கட்டணம் குறைக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார் . இனி வரும் ஆகஸ்டு 10 முதல், 130 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி வரியும் மாதக்கட்டணமாக செலுத்தினால் போதுமானது