6G க்கு தயாராகும் ஜப்பான் : Japan to launch 6G by 2030

6G க்கு தயாராகும் ஜப்பான் : Japan to launch 6G by 2030


2020ம் ஆண்டில் பல்வேறு தொலைபேசி நிறுவனங்கள் 5ஜி வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகின்றார்கள். உலகில் பல பகுதிகளில் 5ஜி சேவை இறந்தாலும்.


இந்தியாவில் எப்போது 5ஜி சேவை ஆரம்பிப்பார்கள் என்பதை பற்றிய எந்த ஒரு தகவலும் இல்லை. இந்தியாவில் 5ஜி சேவை அனைத்து இடங்களில் வர ஐந்து முதல் பத்து வருடங்கள் ஆகலாம் என கணிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில் ஜப்பான் 5ஜி சேவைக்கு அடுத்தபடியாக 10 மடங்கு வேகம் அதிகம் உள்ள 6ஜி சேவைக்கு தயாராகி வருகிறது. இதற்காக ஜப்பான் மத்திய உள்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை சிறப்பு ஆராய்ச்சி கமிட்டியை உருவாக்கியுள்ளது.


5ஜி தொழில்நுட்பத்துக்காக ஜப்பானின் அடித்தள நிதி 200 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.இந்நிலையில் இன்றைய மதிப்பில் 2030-ல் அறிமுகமாக உள்ள 6ஜி-க்கு 20 மடங்கு அதிக நிதி தற்காலிகமாக கணிக்கப்பட்டுள்ளது.


2030 இல் அறிமுகம் செய்யப்படும் பத்தி சேவைக்கு தற்போது ஜப்பான் ஆராய்ச்சியில் இறங்கி உள்ளது.