விரைவில் 6G சேவை துவக்கம் ? Waiting for 6G? China starts 6G development | Tech News in Tamil

விரைவில் 6G சேவை  துவக்கம் ? Waiting for 6G? China starts 6G development | Tech News in Tamil


இந்தியாவில் இப்போதுதான் 4ஜி சேவை பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருகின்றார்கள். அதிலும் ஜியோ வருகைக்கு பின்புதான் 4ஜி சேவை மக்களுக்கு மிக எளிதாக சென்றது என்று சொன்னால் மிகையாகாது.


ஆனால் அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் 4ஜி சேவையை இந்தியாவில் துவங்கவில்லை விரைவில் இந்தியா முழுவதும் 4ஜி சேவை கொண்டுவரப் போவதாக அறிவிப்பு மட்டும் வெளியிட்டு இருக்கிறார்கள்.


தற்போது இந்தியாவில் 5ஜி சேவைக்கான சோதனை நடைபெற்று வருகிறது எப்படியும் இந்த சேவை அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் வருவதற்கு 3 முதல் 5 ஆண்டுகள் ஆகலாம்.


ஆனால் நம் அண்டை நாடான சைனாவில் 6G சேவைக்கான சோதனை தற்போது நடைபெற்று வருகின்றது. விரைவில் அந்த நாட்டில் 6G சேவை வர இருக்கின்றது. இதற்கு முக்கியமான காரணம் அமெரிக்காவுடன் இருக்கும் தொழில் போட்டி என்று கூறலாம்.