விண்வெளிக்கு செல்லும் இந்தியாவின் முதல் ரோபோ : Vyoma mitra robot | ISRO sends Vyomamitra humanoid to space

விண்வெளிக்கு செல்லும் இந்தியாவின் முதல் ரோபோ : Vyoma mitra robot | ISRO sends Vyomamitra humanoid to space

விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா தொடர்ந்து பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. 2021ம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டு வருகிறது.


விண்வெளிக்கு செல்லும் வீரர்களுக்கு தற்போது ரஷ்யா பயிற்சி அளித்து வருகிறது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்கு முன்பு சில ரோபோக்களை அனுப்பி ஆராய்ச்சி செய்யும் இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

வ்யோமமித்ரா என்று அழைக்கப்படும் ரோபோ ஒன்றை பெங்களூருவில் இஸ்ரோ அறிமுகம் செய்துள்ளது. வ்யோமமித்ரா என்ற பெயர் சமஸ்கிருத வார்த்தைகள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. வ்யோம என்றால் வானம் மித்ரா என்றால் நண்பன் என்று பொருள்.

இந்த ரோபோக்கள் இந்த ஆண்டு இறுதி மற்றும் அடுத்த ஆண்டில் அனுப்ப  இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது. இந்த ரோபோக்கள் விண்வெளியில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த ரோபோ உதவிகரமாக இருப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

— Red Tech Tamizha (@Redtechtamizha) January 23, 2020