வாட்ஸ்அப் பயனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி : No Ads On WhatsApp

வாட்ஸ்அப் பயனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி : No Ads On WhatsApp


வாட்ஸ்அப் நிறுவனத்தை ஃபேஸ்புக் வாங்கியது வாங்கியதில் இருந்து பல்வேறு புதிய விஷயங்களை பேஸ்புக அமல்படுத்தி வருகின்றது. ஆனால் பேஸ்புக் அப்ளிகேஷனில் இதுவரைக்கும் விளம்பரம் கிடையாது.

இந்நிலையில் வாட்ஸ் அப் நிறுவனம் இன்ஸ்டகிரம் போல் Storyஇல் விளம்பரத்தை காண்பிக்க திட்டமிட்டு இருந்தது.

ஆனால் வாட்ஸ்அப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் வாட்ஸப்பில் விளம்பரம் வருவதை விரும்பவில்லை. ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டில் ஃபேஸ்புக் நிறுவனத்தை பின்னுக்குத்தள்ளி அதிக டவுன்லோட் செய்யும் அப்ளிகேஷன் பட்டியலில் டிக் டாக் அப்ளிகேஷன் முன்னிலையில் இருக்கின்றது.


இந்த சூழ்நிலையில் வாட்ஸ்அப் தற்போது அதிகம் டவுன்லோட் செய்த அப்ளிகேஷனில் முதலிடத்தில் இருந்தாலும் விளம்பரம் கொடுக்கும் பட்சத்தில் வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப் அப்ளிகேஷனை பயன்படுத்தாமல் இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றது.

இதைக் கருத்தில் கொண்ட பேஸ்புக் நிறுவனம் ஏற்கனவே வாட்ஸ் அப் அப்ளிகேஷனில் விளம்பரம் போடுவதற்காக ஒரு குழு அமைத்திருந்தது தற்போது அந்த குழுவை வாட்ஸ்அப் கலைத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வேறு எந்த விதத்தில் வாட்ஸ்அப் மூலமாக பணம் சம்பாதிக்கலாம் என்பதை பற்றி ஆராயுங்கள் என அறிவுரை கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.