இந்த வசதியை யூடியூப் நிறுத்தப் போகிறது ? YouTube Remove Private Messages Option

YouTube New Update 2019 in Tamil –  YouTube Remove Private Messages Option


யூடியூப் இணையதளத்தை தற்போது அதிக அளவில் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.    இந்த யூடியூப் இணையதளம் பிரபல Video-sharing website ஆகும் இந்த இணைய தளத்தை Google  கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.


யூட்யூபில் அடிக்கடி புதிய அப்டேட்களை யூடியூப் பயனாளர்களுக்கு கொடுக்கும்.  அந்த வரிசையில் யூடியூபில் பயனாளர்கள் அதிகம் பயன்படுத்தாத சில வசதிகளை அவ்வப்போது யூட்யூப்பில் இருந்து யூடியூப் நீக்கும்.


செப்டம்பர் 18 இல் இருந்து யூட்யூபில் இருக்கும் Messaging feature யூடியூப் நிறுத்த உள்ளது.  இந்த வசதி மூலம் யூட்யூபில் அப்லோட் செய்யப்படும் வீடியோவை ஷேர் செய்யலாம் அந்த வீடியோ பற்றி நாம் விவாதிக்கலாம். இந்த வசதியை பெரும்பாலான Youtubers மற்றும் பயனாளர்கள் இதை பயன்படுத்தவில்லை.


இப்படி  ஒரு வசதி இருப்பது பெரும்பாலான பயனாளர்களுக்கு தெரியாது. இந்நிலையில் இந்த வசதி செப்டம்பர் 18 இல் இருந்து யூடியூப் அதிரடியாக நீக்க உள்ளது.