விண்டோஸ் 7 பயன்படுத்துவது ஆபத்து ? Windows 7 Support End Date

விண்டோஸ் 7  End of Support | Windows 7 Support Ends January 14

பெரும்பாலான மக்கள் விண்டோஸ் மென்பொருள் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். மைக்ரோ சாப்ட் நிறுவனத்தால் கடந்த 2015ஆம் ஆண்டு விண்டோஸ் 10 ஓஎஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. விண்டோஸ் 10 அறிமுகம் செய்யப்பட்டாலும் பல வாடிக்கையாளர்கள்  தற்போதும் விண்டோஸ்7 மென்பொருள்களை பயன்படுத்தி வருகின்றார்கள்,


இந்நிலையில், விண்டோஸ் 10 மென்பொருளை பயனர்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்காக மைக்ரோ சாப்ட் நிறுவனம் விண்டோஸ் 7 பயன்பாட்டை தடை செய்ய முடிவெடுத்துள்ளது.


ஜனவரி 14 முதல் விண்டோஸ் 7 மென்பொருளுக்கு எந்த Security updates, patches, performance boosts அப்டேட்களும் கொடுக்கப் போவதில்லை என அதிரடியாக மைக்ரோ சாப்ட் அறிவித்துள்ளது. 

விண்டோஸ் 7 பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இலவசமாக விண்டோஸ் 10 க்கு மாறிக்கொள்ளலாம் என்ன அறிவித்துள்ளது. நீங்கள் விண்டோஸ் 10ற்கு மாறவில்லை என்றால் உங்கள் கணினிக்கு எந்த ஒரு பாதுகாப்பும் இருக்காது.

எந்த ஒரு பாதுகாப்பு அப்டேட்டும் விண்டோஸ் 7க்கு வராது. இதன் மூலமாக உங்களுடைய கணினி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகலாம்.